ரொனால்டோவின் சாதனையை தகர்த்தெறிந்த 25 வயது வீரர்!
மான்செஸ்டர் அணிக்காக 25 கோல்கள் அடித்து ரொனால்டோவை முந்தினார் இளம் வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டு.
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
நேற்று நடந்த ஐரோப்பிய லீக் தொடர் போட்டியில் ரியல் பெட்டிஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது. 25 வயது இளம் வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்த கோல் அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது.
@AFP
ரொனால்டோவை முந்திய ராஷ்ஃபோர்டு
மேலும், ஐரோப்பிய லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்த 25வது கோல் இதுவாகும். இதன்மூலம் அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தினார்.
ஐரோப்பாவின் முதல் ஐந்து லீக்களில் எர்லிங் ஹாலண்ட் 39 கோல்களும், கைலியன் எம்பாப்பே 31 கோல்களும் அடித்துள்ளனர்.
@Getty
@Getty