அயர்லாந்தை தனியாளாக சம்பவம் செய்த ரஷீத் கான்
Afghanistan beat Ireland by 3 Wickets: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெல்ஃபாஸ்டில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
206-க்கு ஆல்அவுட்
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி ரஷீத் கான், காஸன்ஃபர் மற்றும் யாமினின் அபார பந்துவீச்சில் 206 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேவின் ஹோயி 36 ஓட்டங்களும், கேட் கேர்மைக்கேல் 32 ஓட்டங்களும் எடுத்தனர். ரஷீத் கான், காஸன்ஃபர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆட ஜட்ரான் 12 ஓட்டங்களும், அடல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஹ்மத் ஷா 4 ஓட்டங்களில் வெளியேற, ஷாஹிதி 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஷீத் கான் அபாரம்
மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 149 ஆக உயர்ந்தபோது குர்பாஸ் 71 ஓட்டங்களில் (5 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரசூலி (13), ஓமர்சாய் (13) இருவரும் சொதப்ப, ரஷீத் கான் (Rashid Khan) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |