4 விக்கெட் வீழ்த்தி ஜிம்பாப்பேவை அலறவிட்ட ரஷித் கான்!
ரஷித் கானின் மிரட்டல் பந்துவீச்சில் ஜிம்பாப்பே அணி 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்பே
ஹராரேயில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்பே அணி ஓமர்சாய், முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.
ரஷித் கான் விக்கெட் வேட்டை
அந்த அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறிய நிலையில், ரஷித் கான் விக்கெட் வேட்டையை தொடங்கினார்.
அவரது பந்துவீச்சில் பராஸ் அக்ரம் (6), தஷிங்கா (12), ங்கரவா (1) மற்றும் முஸ்ரபாணி (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் ரஷித் கான் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜிம்பாப்பே அணி 19.5 ஓவரில் 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |