தசுன் ஷானகாவின் அணியை காலி செய்த ரஷீத்கான்! தெறிக்கவிட்ட ஜானி பேர்ஸ்டோவ்
துபாயில் நடந்த ILT20 தொடர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துபாய் கேபிட்டல்ஸை வீழ்த்தியது.
ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி
மும்பை இந்தியன்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய ILT20 போட்டி துபாயில் நடந்தது.
In the air and in the mitts! 🫴
— International League T20 (@ILT20Official) December 17, 2025
David Willey breaks through and end his spell with an important scalp of Muhammad Waseem! 👏#DPWorldILT20 #WhereTheWorldPlays #AllInForCricket pic.twitter.com/gCAzzYM3se
முதலில் களமிறங்கிய MI எமிரேட்ஸ் அணியில், ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால் ஏனைய வீரர்கள் சொதப்ப, கடைசி கட்டத்தில் ரோமரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) 10 பந்துகளில் 18 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, MI எமிரேட்ஸ் 137 ஓட்டங்கள் எடுத்தது.
Beast Mode 🔓
— International League T20 (@ILT20Official) December 17, 2025
Jonny Bairstow registered the second overall fifty for the MI Emirates this season, and what a time to do so! ⚡️
A blend of caution and aggression, Jonny put up a thoroughly entertaining <score>! 😍#DPWorldILT20 #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/gBgPifcxgE
முஸ்தாபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், ஜவாதுல்லா 2 விக்கெட்டுகளும், வில்லி, ஹைதர் மற்றும் வாக்கர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய துபாய் கேபிட்டல்ஸ் அணியில் ஷாயான் ஜஹாங்கிர் 34 ஓட்டங்களும், ஜோர்டான் காக்ஸ் 46 (41) ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.
ரஷீத் கான் அபாரம்
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ரோவ்மன் பவல் (Rovman Powell) 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
MI Emirates put up an absolute masterclass in defending! ✌️
— International League T20 (@ILT20Official) December 17, 2025
Defending a paltry total, the first half of the chase belonged to the Capitals, but the MI Emirates' dogged effort with the ball brought them back in the game dramatically, pulling off a miraculous victory! 🤯🥵… pic.twitter.com/V7r5uxNSRH
தசுன் ஷானகா (Dasun Shanaka) 3 ஓட்டங்களில் கமிந்து மெண்டிஸ் ஓவரில் போல்டு ஆக, ஜேம்ஸ் நீஷம் ஓட்டங்கள் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
ஷெப்பர்ட், நவீன் உல் ஹக் மிரட்டலாக விக்கெட்டுகளை வீழ்த்த, ரஷீத் கான் துல்லியமாக ஓட்டங்கள் விட்டுக்கொடுக்காமல் பந்துவீசினார்.
இதனால் துபாய் அணி 20 ஓவரில் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |