T20 கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை படைத்த ரஷீத் கான்
rashid khan become first bowler took 200 wickets in t20i: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரஷீத் கான் சாதனை
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.

இதில், ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், ஜிம்பாப்வே வீரர் தடிவனாஷே மருமானியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், 120 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி, 200 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷீத் 171 விக்கெட்களுடன் 2வது இடத்திலும், எஹ்சான் கான் 165 விக்கெட்களுடன் 3வது இடத்திலும், இஷ் சோதி 165 விக்கெட்களுடன் 4வது இடத்திலும், டிம் சௌதீ 164 விக்கெட்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.