T20 வரலாற்றில் உலக சாதனை படைத்த ரஷீத் கான் - முதல் 20 இடத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை
T20 கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார் ரஷீத் கான்.
AFG vs UAE
ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் விளையாடும் முத்தரப்பு T20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் 2 போட்டிகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக செடிகுல்லா அடல்(54) மற்றும் இப்ராஹிம் ஜத்ரான்(63) ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர்.
189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஷீத் கான் சாதனை
இந்த போட்டியில், 3 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான் படைத்துள்ளார்.
ரஷீத் கான், 68 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி, 165 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து வீரர் டிம் சௌதி, 126 போட்டிகளில் விளையாடி, 164 விக்கெட்களை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
100க்கும் அதிகமான சர்வதேச T20 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில், முதல் 20 இடங்களில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை.
ஏற்கனவே T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள், அதிவேகமாக 100 T20 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் உள்ளிட்ட சாதனைகளை ஏற்கனவே ரஷீத் கான் தன்வசம் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |