ஐபிஎல்-யில் அதிவேக 100.. சாதனை படைத்த ரஷித் கான்!
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷித் கான், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல்-யில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அமித் மிஸ்ரா இதற்கு முன்பாக 83 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அந்த சாதனையை ரஷித் கான் சமன் செய்துள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை சாய்த்த 16வது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள்:
- அமித் மிஸ்ரா - 83 போட்டிகள்
- ரஷித் கான் - 83 போட்டிகள்
- யுஸ்வேந்திர சாஹல் - 84 போட்டிகள்
-
சுனில் நரைன் - 86 போட்டிகள்