பிராவோவின் நெருங்க முடியாத சாதனையை ஊதித்தள்ளிய 26 வயது ரஷித் கான்
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
பிராவோ
மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் வீரர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) 91 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆனால், ஐபிஎல் உட்பட ஒட்டுமொத்தமாக 582 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் இமாலய சாதனையை வைத்திருந்தார்.
முறியடித்த ரஷித்கான்
தற்போது ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் ரஷித்கான் அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
26 வயதாகும் ரஷித் கான் (Rashid Khan) 461 போட்டிகளில் 633 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் அவரது சராசரி 18.07 மற்றும் சிறந்த பந்துவீச்சு 6/17. நான்குமுறை 5 விக்கெட்டுகளை சாய்துள்ளார்.
அதே சமயம் 41 வயது வேகப்பந்து வீச்சாளரான பிராவோ, மூன்று முறை 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/23 மற்றும் சராசரி 24.40 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |