டி20 உலகக்கோப்பையில் அபார பந்துவீச்சு! இலங்கை ஜாம்பவான் மலிங்காவின் உலக சாதனையை முறித்த ஆப்கான் வீரர் ரஷித்கான்
டி20 கிரிக்கெட்டில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முறியடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார். இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் .
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை வெறும் 23 வயதான அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் அதை ரஷித் கான் முறியடித்துள்ளார்.