முடிவு மனவருத்தம் தான், ஆனால் மீண்டு வருவோம்! ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரஷீத் கான் நம்பிக்கை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷீத் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் அதிர்ச்சி தோல்வி
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின் முக்கிய கட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். ஆனால், கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
@PTI
ரஷீத் கான் நம்பிக்கை
போட்டியின் முடிவு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த நிலையில் மீண்டு வருவோம் என ரஷீத் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
@Twitter/GujaratTitans
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நம்மை நாம் நம்புவதற்கு எப்போதும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது, இன்று (நேற்று) அதற்கு ஒரு உதாரணம்! முடிவு மனவருத்தம் ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்' என தெரிவித்துள்ளார்.
Sport teaches us to always believe in yourself, today was an example of that!
— Rashid Khan (@rashidkhan_19) April 9, 2023
Disheartned with the result but we will bounce back ?#AavaDe #GujaratTitans #TATAIPL2023 #TATAIPL pic.twitter.com/l0k6rMPM7N