158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஜிம்பாப்வேயை சம்பவம் செய்த ரஷீத் கான்
Afghanistan beat zimbabwe by 136 runs: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபியில் நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டி அபுதாபியில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 294 ஓட்டங்கள் குவித்தது. அடல் 102 ஓட்டங்களும், இப்ராஹிம் ஜட்ரான் 90 ஓட்டங்களும் எடுத்தனர்.
பிராட் எவன்ஸ் மற்றும் எர்னஸ்ட் மசுகு தலா 3 விக்கெட்டுகளும், பிளெஸ்ஸிங் முஸரபாணி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.4 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 48 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான் (Rashid Khan) 4 விக்கெட்டுகளும், பரூக்கி 2 விக்கெட்டுகளும், கஸன்பர் மற்றும் நபி தலா விக்கெட்டும் வீழ்த்தினர். 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்றது.