அம்மா திரும்பி வருவிங்களா.. ரஷித் கான் பதிவிட்ட கலங்க வைக்கும் வார்த்தைகள்!
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரஷித் கான், இவர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ரஷித் கான், தனது ட்விட்டர் பதிவில் மறைந்த அம்மாவை நினைவுகூர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
தான் அம்மாவின் சமாதி முன் நிற்கும் புகைப்படத்துடன் ரஷித் கான் பதிவிட்டதாவது, அன்புள்ள அம்மா, திரும்பு வந்து இன்னும் சில நாட்கள் என்னும் இருப்பிங்களா, உங்கள் குரலை நான் கேட்க வேண்டும், உங்கள் சிரிப்பை பார்க்க வேண்டும்.
தோனி பேட்டை கடித்தது ஏன்? வெளியான காரணம்
உங்களை கட்டியணைந்து எங்கேயும் போகவிடாமல், நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என கூற வேண்டும்.
உங்களை நினைகூர்வது சுலபம், தினமும் உங்களை நினைக்கிறேன், ஆனால் உங்கள் பிரிவு மனவேதனை, அது என்னும் என்னை விட்டு நீங்காது என ரஷித் கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Dear Mom ,
— Rashid Khan (@rashidkhan_19) May 8, 2022
Could you come back and stay for while,I want to hear your voice and see you smile.I want to hold you tight and never let you go and tell u how much I love u.Remembering you is easy,I do it everyday,but missing you is heartache that never goes away. #happymothersday❤️ pic.twitter.com/fdsTqBMWYG
ரஷித் கானின் அம்மா, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.