திடீரென அவுஸ்திரேலிய கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய ரஷித் கான்! வெளியிட்ட பதிவு
அவுஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வெளியேறியுள்ளார்.
அவுஸ்திரேலியா விலகல்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தாலீபன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மறுபுறம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.
இந்த நிலையில், பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது.
இதனால் தனது நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் அதிலிருந்து வெளியேறியுள்ளார்.
ரஷித் கானின் பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களுடனான தொடரில் இருந்து அவுஸ்திரேலியா வெளியேறியுள்ளதை அறிந்து நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். எனது நாட்டுக்காக நான் விளையாடுவது எனக்கு என்றென்றும் பெருமை. கிரிக்கெட்டில் உலகளவில் நாங்கள் முன்னற்றம் கண்டு வரும் இந்நேரத்தில் எங்களுக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.
இதற்கு காரணம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்துள்ள முடிவுதான். ஆப்கானிஸ்தான் உடன் விளையாடுவது அவுஸ்திரேலியாவுக்கு சங்கடத்தை கொடுத்தால் BBL (பிக்பாஷ் லீக்) தொடரில் விளையாடி நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அதில் எனது எதிர்கால பங்களிப்பு குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 'கிரிக்கெட் விளையாட்டு தான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை. ஆதலால் அரசியலை விட்டு விலகி இருங்கள்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Cricket! The only hope for the country.
— Rashid Khan (@rashidkhan_19) January 12, 2023
Keep politics out of it. @CricketAus @BBL @ACBofficials ♥️ ?? ♥️ pic.twitter.com/ZPpvOBetPJ