ODI கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ள ரஷீத் கான்
ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்திற்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது.

இதன்படி, 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 33.4 ஓவர்களில் 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஷீத் கான் சாதனை
இந்த போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டிலும், இதே அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ், ஒருநாள் போட்டிகளில் 5 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |