RR அணிக்கு கடைசி ஓவரில் மரண அடி கொடுத்த ரஷித் கான்..வெற்றி குறித்து கூறிய விடயம்
சிக்ஸர்கள் விளாசுவது பெரிய விடயம் அல்ல என குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷித் கான் கூறினார்.
ரஷித் கான்
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அதன் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.
குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, களத்தில் இருந்த ரஷித் கான் (Rashid Khan) அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.
அவர் 11 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியது மூலம் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
#GTKarshe ⚡ pic.twitter.com/FYjxoRkGtV
— Gujarat Titans (@gujarat_titans) April 10, 2024
வெற்றி பெற்றது மகிழ்ச்சி
போட்டிக்கு பின்னர் பேசிய ரஷித் கான், ''போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று (நேற்று) நான் நினைத்தபடி பந்து சென்றது. அதுவே எனக்கு துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்பட ஆற்றலைக் கொடுத்தது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 3-4 மாதங்களில் நான் அதிகம் பந்துவீசவில்லை, மேலும் நான் எனது பந்துவீச்சு மீதான பிடியை இழந்தேன்.
கடைசி போட்டிக்கு பின் நான் ஒரு நல்ல அமர்வைக் கொண்டிருந்தேன், அது எனது சிறந்த நிலைக்குத் திரும்ப உதவியது. இன்று எனது பந்துவீச்சை மிகவும் ரசித்தேன். நீங்கள் பாசிட்டிவ் ஆக இருந்தால், 3-4 சிக்ஸர்களை அடிப்பது என்பது ஒரு பெரிய விடயம் அல்ல'' என தெரிவித்தார்.
Big game, ?????? performance!#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #RRvGT pic.twitter.com/mcM6ZAB0UU
— Gujarat Titans (@gujarat_titans) April 10, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |