கண்ணீர்விட்டு அழுத ஐபிஎல் வீரர்! ஏன் தெரியுமா? ரஷீத் கான் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன், இளம் வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சியை ரஷீத்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக ஹைதராபாத் அணி இருக்கும். ஆனால், இந்த முறை ஹைதராபாத் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து இப்போட்டியில் ஹைதராபாத் அணியில் இளம் வீரர் உம்ரன் மாலிக் களமிறங்கினார்.
Surprising our young debutant with wishes from ? just before our game yesterday ❤️#MondayMotivation #Debutant #YoungSpeedgun #UmranMalik pic.twitter.com/1mzoiW6kLm
— Rashid Khan (@rashidkhan_19) October 4, 2021
இவருக்கு இது தான் முதல் ஐபிஎல் போட்டி என்பதால், இவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஹைதராபாத் அணி நிர்வாகம், அவர் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை காண்பித்தனர்.
இதைப் பார்த்த உமர் மாலிக் உடனடியாக உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார். இதை ரஷீத்கான் வீடியோவாக எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் உமர் மாலிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.