அடித்து நொறுக்கிய டி காக், ரிக்கெல்டன்! செக் வைத்த ரஷித் கான்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 187 ஓட்டங்கள் குவித்தது.
ரிக்கெல்டன், டி காக் கூட்டணி
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தொடங்கியது.
மார்க்ரம் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குயிண்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கெல்டன் கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டது.
ரஷித் கான் அபாரம்
ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) 23 பந்துகளிலும், குயிண்டன் டி காக் (Quinton de Kock) 34 பந்துகளிலும் அரைசதம் விளாசினர்.
ஆனால் இந்த அதிரடி கூட்டணியை ரஷித் கான் (Rashid Khan) முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது பந்துவீச்சில் டி காக் 59 (41) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 61 (28) ஓட்டங்கள் குவித்த ரியான் ரிக்கெல்டன் lbw முறையில் ரஷித் கான் ஓவரில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து டெவால்ட் பிரேவிஸ் 23 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 20 ஓட்டங்களும் விளாச தென் ஆப்பிரிக்கா 187 ஓட்டங்கள் குவித்தது. ஓமர்சாய் 3 விக்கெட்டுகளும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், ஃபரூக்கி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |