அரசியல் பற்றி அதிகம் தெரியாது, பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும்: அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ரஷீத் கான்
நாங்கள் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
சாதனை வெற்றி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
சர்வதேச அளவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பெற்று அந்த அணி சாதனை படைத்தது.
ஆப்கானிஸ்தானின் இந்த சரித்திர வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அணியின் தலைவர் ரஷீத் கான் ( Rashid Khan) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாட உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பயணம்
அவர் கூறுகையில், ''நாங்கள் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட்டைப பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. என்னைப் பொறுத்தவரை எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம்.
கிரிக்கெட்டில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத சில விடயங்கள், அதைப் பற்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எதாவது செய்ய விரும்புகிறோம். அது ஒரு வகையான தீர்வாக இருந்தால், நாங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். ஆனால் அதற்கு என்ன தீர்வு என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''எந்தப் பக்கத்திலும் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் முன்பு குறிப்பிட்டது போல், சில விடயங்கள்; அரசாங்கம் மற்றும் அரசியல் விடயங்கள்; இவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, எனக்கு பிடிக்கவில்லை. எனவே, இதற்கு என்னிடம் பதில் இல்லை.
ஆனால், என் மனதில் எப்போதும் இருக்கும் ஒரே விடயம், பாரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். நான் விளையாடுவதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறேன்.
அனைவரிடம் இருந்தும் நான் மிகவும் அன்பைப் பெற்றுள்ளேன். Big Bash தொடருக்காக நான் அவுஸ்திரேலியா செல்லும்போதெல்லாம், அங்குள்ள ரசிகர்களிடம் இருந்து எனக்கு அன்பும், ஆதரவும் அதிகம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |