நடராஜானுக்கு கொரோனா எப்படி பரவியது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு கொரோனா எப்படி பரவியிருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின, இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர நடராஜனுக்கு கொரோனா உறுதியானது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பரவல் பயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், இந்தியாவில் நடத்தப்படாமல், ஒத்தி வைக்கப்பட்ட இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
"This is how we celebrate as a team"
— SunRisers Hyderabad (@SunRisers) September 20, 2021
The birthday boy puts his seal of approval on getting a cake-smash ?#OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/5K7OCVLnKn
அதையும் தாண்டி எப்படி நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 20-ஆம் திகதி ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத்கானுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இது சன் ரைசர்ஸ் கேம்ப்பில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது. இதில், அந்த பிறந்தநாளின் போது கேக் மற்றும் இதர கொண்டாட்டங்களுக்கான அனைத்தும் ஏறபாடுகளும் வெளியில் இருந்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படி வெளியிலிருந்து வந்த பொருள் மூலம் நடராஜனுக்கு கொரோனா பரவி இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.