நடிகை ராஷ்மிகா 'AI Deep Fake Video' விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது
நடிகை ராஷ்மிகா 'AI Deep Fake Video' விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஒருவர் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா 'AI Deep Fake Video' விவகாரம்
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 6ஆம் திகதி, நடிகை ராஷ்மிகா இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.
உண்மையில் அந்த வீடியோவில் இருந்த பெண்ணின் பெயர் Zara Patel. அவர் ஒரு பிரித்தானிய இன்ப்ளூயன்சர் ஆவார். அவரது உடலுடன் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை இணைத்து செயற்கை நுண்ணறிவு முறையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது.
இந்த சம்பவம் அமைச்சர்கள் வரை எட்டிய நிலையில், ஏராளமானோர் இப்படி போலியாக வீடியோக்கள் உருவாக்கப்படுவதற்கெதிராக குரல் கொடுத்திருந்தார்கள்.
முக்கிய குற்றவாளி கைது
அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை டெல்லியில் வைத்து கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |