கன்னட மொழியை புறக்கணித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்: காங்கிரஸ் MLA சர்ச்சை பேச்சு
கன்னட மொழியை புறக்கணித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சையாக பேசியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
2016 ஆம் ஆண்டு ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார். தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து இந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மறுத்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா மீது காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கடும் விமர்சனம் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கர்நாடகாவில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஷ்மிகா மந்தனா, கடந்த ஆண்டு (பெங்களூரு) சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைத்தபோது கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார்.
என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது, என்னால் வர முடியாது என்று ராஷ்மிகா கூறினார். கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டாமா?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |