இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களுடன் விரிசல் வரலாம்! எதிர்பார்த்த வேலை முடியும்.. இன்றைய ராசிப்பலன்
08/02/2022 - 12 ராசிகளுக்கான இன்றைய ராசிப்பலன்களை காணலாம்.
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும்.
ரிஷபம்
மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும்.
மிதுனம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம்
சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.
சிம்மம்
இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
கன்னி
சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.
துலாம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.
தனுசு
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
கும்பம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும்.
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.