கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்!
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சாதாரணமாக 2-BHK வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர்.
ரத்தன் டாடா பகிர்ந்த புகைப்படம்
கோடீஸ்வர தொழிலதிபர் ரத்தன் டாடா, செவ்வாயன்று (ஜனவரி 10) தனது இளைய சகோதரர் ஜிம்மி டாடாவுடனான தனது பிணைப்பைக் கொண்டாடும் வகையில் 1945-ல் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்பதிவில், “அது மகிழ்ச்சியான நாட்கள். எங்களுக்கு நடுவில் எதுவும் வந்ததில்லை. (1945 என் அண்ணன் ஜிம்மியுடன்),” என்று டாடா பதிவிட்டிருந்தார்.
ஜிம்மி டாடா எளிமையான வாழ்க்கை
82 வயதான ஜிம்மி Tata Sons மற்றும் பிற டாடா குழும நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். அப்படியானால் அவர் பல கோடிகளுக்கு அதிபராவார், ஆனால் அவர் அண்ணனைவிட எளிமையாக வாழ விரும்புகிறார்.
ஜிம்மி இன்னும் மும்பையில் சாதாரணமாக ஓர் 2-BHK பிளாட்டில் வசிக்கிறார் என்பதும் அவருக்கு சொந்தமாக மொபைல் போன் கூட இல்லை என்பதும் ஆச்சரியமாக உள்ளது.
ஜிம்மி டாடா Tata Sons, TCS, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் டாடா பவர் ஆகியவற்றில் பங்குதாரர்.
ஜிம்மி டாடாவும் ரத்தன் டாடாவை போலவே திருமணமாகாதவர் மற்றும் அவர் தனது பெரும்பாலான நேரத்தை தனது வீட்டில் செலவிட விரும்புகிறார்.
ஜிம்மி Sir Ratan Tata Trust அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார். ஜிம்மியை அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒரு பார்சி குடும்பத்திலிருந்து சர் ரத்தன்ஜி டாடாவின் மனைவி நவாபாயால் தத்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.