செல்ல நாய்க்கு சொத்தில் பங்கு வழங்கிய ரத்தன் டாடா: வெளியான உயில் விவரங்கள்!
சமீபத்தில் மறைந்த பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது செல்லப்பிராணி நாய்க்கும் சொத்தில் குறிப்பிட்ட அளவு பங்கினை வழங்கி உயில் எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாடாவின் சொத்துக்கள்
தொழில் உலகின் சிகரம், மனிதநேயத்தின் உன்னத உதாரணமாக திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவு, உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரத்தன் டாடாவிடம் மும்பையின் கடற்கரையை ஒட்டிய 2,000 சதுர அடி அலிபாக் பங்களா, ஜூஹூ பகுதியின் தாரா சாலையில் இரண்டு அடுக்கு வீடு, கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்கு என, மொத்தம் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்நிலையில், அவரது உயில் விவரங்கள் வெளியாகி, அவரது அளப்பரிய மனிதநேயத்தை மீண்டும் ஒரு முறை உணர வைத்துள்ளன.
அதில், தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, தன் குடும்பத்தினர் மட்டுமின்றி, தன் வாழ்வில் பங்களித்த அனைவரையும் உள்ளடக்கி, ரத்தன் டாடா தனது உயிலை எழுதியுள்ளார்.
ரத்தன் டாடாவின் உயில் விவரங்கள்
குடும்பத்தினருக்கு: தன் அறக்கட்டளை, சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன், டியானா ஜிஜீபாய் ஆகியோருக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளார்.
பணியாளர்களுக்கு: தன் பங்களாவில் பணியாற்றிய அனைவருக்கும், குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு உணவு பரிமாறிய சுப்பையாவுக்கும், தனது உதவியாளர் ஷாந்தனு நாயுடுவுக்கும் நன்றியுணர்வின் அடையாளமாக, குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளார்.
செல்லப் பிராணியான டிடோவுக்கும் பங்கு: தனது பிரியமான செல்ல நாய் டிடோவை தன் சமையல்காரர் ராஜன் ஷா நன்றாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டிடோவின் நலனுக்காக, ராஜன் ஷாவுக்கு தனது சொத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |