ரத்தன் டாடாவின் காதல் கதை! சுவாரஸ்யமான நினைவுகள்

TATA
By Sathya Aug 05, 2023 07:13 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர் ரத்தன் டாடாவின் சுவாரஸ்யமான நினைவுகளை தான் பார்க்க போகிறோம்.

ரத்தன் டாடாவின் தாய், தந்தை விவாகரத்து

சமுக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா தனது வாழ்க்கையில் நடந்துள்ள சுவாரஸ்யமான சம்பவங்களையும், தாக்கத்தையும் பற்றி பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர், எங்களுடைய குழந்தை பருவம் நன்றாக சென்றது. ஆனால், எங்களது தாய் மற்றும் தந்தையின் திருமண விவாகரத்திற்கு பின்பு நானும், என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம். பின்பு, எங்களை பாட்டி தான் கவனித்துக் கொண்டார்.

ரத்தன் டாடா / Ratan Tata

என் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த போது பள்ளிகளில் எங்களை கிண்டல் செய்து பேசுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய பாட்டி சண்டை போட கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை செய்வார்.

தந்தையுடன் மனக்கசப்பு

அதுமட்டுமல்லாமல், எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மனக்கசப்புகள் அதிகமாக இருந்தன. நான் வயலின் கற்றுக் கொள்ள நினைத்த போது, அவர் என்ன பியானோ கற்க வேண்டும் என்றார். நான் படிப்பதற்கு அமெரிக்க செல்ல நினைத்த போது, அவர் என்னை பிரிட்டன் செல்ல வேண்டும் எனக் கூறினார்.

ரத்தன் டாடா / Ratan Tata

மேலும், நான் கட்டிட வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்று நினைத்த போது, அவர் என்னை பொறியாளர் ஆக வேண்டும் எனக் கூறினார். இருந்தாலும் ரத்தன் டாடா தனது விருப்பப்படியே அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்துக்கு படிக்க சென்றார். அதற்கு முழு காரணம் தனது பாட்டி என்றும் அவர் கூறியுள்ளார்.

ரத்தன் டாடாவின் தாய் 2 ஆவது திருமணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருப்பது தந்தையும், பாட்டியும் மட்டும் தான்.

காதல் கதை

ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருந்த போது தன் மனதிற்கு பிடித்தமான பெண்ணை பார்த்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் அவருடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்தியா திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, தன்னுடைய காதலியும் இந்தியா வருவதாக ரத்தன் டாடா நினைத்துள்ளார். ஆனால், 1962 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டதால் காதலியின் தந்தை, அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை. அதனால், அவர்களது காதல் முறிந்துள்ளது.

ரத்தன் டாடா / Ratan Tata

இதன் பின்னர், அவருடைய குடும்பம் 4 முறை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்த போதும் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மனமில்லாமல் தன்னுடைய பிஸ்னஸ் மீது அவருக்கு காதல் வந்துள்ளது.

மேலும், அவருக்கு ரத்தன் டாடா தனக்கும் ஒரு குடும்பம் வேண்டும் என்று எண்ணி தனிமையை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாம், முதியோருக்கான ஒரு நிறுவனத்தை தொடங்கி வைத்து, தனிமை எவ்வளவு கொடுமை என்பது பற்றி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா சிறந்த மனிதர்

ரத்தன் டாடாவின் காதலியான சிமி சிதனது ட்விட்டர் பக்கத்தில் 2020 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் ஃப்ளாஷ்பேக் படத்தை வெளியிட்டார்.

ரத்தன் டாடா / Ratan Tata

மேலும் அவர், "ரத்தனுக்கும் எனக்கும் நீண்ட வரலாறு உண்டு. அவர் சிறந்த மனிதர், எல்லா வகையிலும் சிறந்தவர். நகைச்சுவை, அடக்கம், குறையற்றவர். பணத்தை அவர் ஒருபோதும் ஊக்குவிப்பவராக இருக்கமாட்டார். வெளிநாட்டில் இருப்பது போல் இங்கு அவர் நிம்மதியாக இல்லை" என கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US