ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.500 கோடி சொத்துக்களை மற்றுமொரு நபருக்கு தனது உயிலில் எழுதி வைத்துள்ளார்.
டாடா எழுதி வைத்த உயில்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா கடந்த ஒக்டோபர் 9 -ம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் யார் யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருக்கிறார்.
இதன் பெரும்பகுதி சொத்துக்கள் டாடா அறக்கட்டளைக்கு செல்கிறது. மேலும், ரத்தன் டாடாவின் கடைசி காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துக்கள் கிடைக்கவுள்ளது.
அவரது சமையல்காரர் ராஜன் ஷா மற்றும் பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்த அவரது பட்லர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.
இந்நிலையில், தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை அவரது தொழில் முறை பங்குதாரர் மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி வைத்துள்ளார். இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டாடாவின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் அவர்?
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மோகினி மோகன் தத்தா (Mohini Mohan Dutta) ஆவார். டிராவல்ஸ் அதிபரான இவர் கடந்த 1960-ம் ஆண்டில் முதன்முறையாக ஜாம்ஷெட்பூரில் ரத்தன் டாடாவை சந்தித்துள்ளர். அப்போது அவர்களுக்குள் நட்பு உருவானது.
80 வயதாகும் மோகினி மோகன் தத்தா, முதலில் டிராவல் ஏஜென்சியான ஸ்டாலியன் நிறுவனத்தை தொடங்கினார். இது தாஜ் குழும ஹொட்டல்களின் துணை நிறுவனமான தாஜ் சர்வீசஸ் உடன் 2013 இல் இணைந்தது.
இந்த வணிகத்தில் மோகன் தத்தா, 80 சதவீத பங்குகளை வைத்திருந்தது. மீதமுள்ள மீதமுள்ள 20 சதவீதத்தை டாடா இண்டஸ்ட்ரீஸ் வைத்திருந்தது. பின்னர் டாடா கேபிடல் நிறுவனத்துக்கு கைமாறி தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
முன்பு தாமஸ் குக்குடன் இணைந்திருந்த டிசி டிராவல் சர்வீசஸில் இயக்குனராகவும் தத்தா பணியாற்றினார்.
இவர், ரத்தன் டாடாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு நன்கு அறியப்பட்டவர். தத்தாவின் மகள்களில் ஒருவர் 2015 வரை தாஜ் ஹோட்டல்களில் பணிபுரிந்தார். பின்னர் டாடா டிரஸ்ட்ஸில் சேர்ந்தார். அங்கு அவர் 2024 வரை இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |