ரத்தன் டாடா உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெறாதது ஏன்? ஒரே ஒரு காரணம்
இந்தியாவில் அறியப்படும் முதன்மையான கோடீஸ்வரர்களில் ஒருவரான ரத்தன் டாடா ஏன் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதன் காரணம் வெளியாகியுள்ளது.
உலகின் பெரும் கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி போன்ற தொழிலதிபர்கள், உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க, ரத்தன் டாடா மட்டும் இந்த வரிசையில் இருந்து விடுபட்டு வருகிறார்.
ஆனால் இந்தியா முழுக்க பல்வேறு துறைகளில் டாடா குழுமத்தின் பங்களிப்பு மற்றும் சேவைகள் தொடர்ந்து வருகிறது. மட்டுமின்றி, டாடாவுக்குக் கிடைக்கும் மரியாதையும் பாராட்டும் அவர் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
டாடா குழுமத்தின் தலைவராக அவரது விதிவிலக்கான தலைமைத்துவம் மற்றும் தொழில் மீதான ஈர்ப்பு, அந்த நிறுவனங்களை மேலும் பல உயரத்திற்கு இட்டுச்சென்றது. ஆனால் 2022ல் வெளியான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரத்தன் டாடாவின் இடம் 421 என்றே கூறப்பட்டது.
அவரது மொத்த சொத்து மதிப்பு அப்போது ரூ 3,800 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது உண்மையா என்ற கேள்வியும் பலரதரப்பில் இருந்து எழுந்தது. உண்மையில் தொண்டு செய்வதில் அவருக்கிருந்த அர்ப்பணிப்பே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட லாபத்திற்காக
டாடா குழுமம் ஈட்டும் மொத்த வருவாயும் டாடா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
முக்கியமாக சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்டவையில் டாடா அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது. டாடா குழுமம் ஈட்டும் வருவாயின் கணிசமான அளவு தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை விட இந்த தொண்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ரத்தன் டாடா உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |