தித்திக்கும் சுவையில் ரவை அப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ரவை அப்பத்தை விரும்பி உண்பார்கள்.
தித்திக்கும் சுவையில் ரவை அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- 1 கப்
- வெல்லம்- 150g
- அரிசி மாவு- ½ கப்
- தேங்காய் துருவல்- ½ கப்
- நெய்- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- ஒரு சிட்டிகை
- கடலெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வெள்ளம் கரைந்தவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ரவை எடுத்து வெல்லப்பாகை ஊற்றி கலந்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த ரவை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின் இந்த அரைத்த கலவையுடன் அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் கடலெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவு ஊற்றி இரண்டு பக்கம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்தால் சுவையான ரவை அப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |