குழந்தைகள் விரும்பி உண்ணும் ரவா பிரட் டோஸ்ட்.., எப்படி செய்வது?
Rava bread toast recipe- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ரவா பிரட் டோஸ்ட்டை விருப்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், சுவையான ரவா பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட் ரவை - ¼ கப்
- தயிர் - ½ கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- குடைமிளகாய் - ½
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு - 1 ஸ்பூன்
- நெய்- சிறிதாவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுத்து பிரட்டை எடுத்து, ரவை கலவையை ஒரு கரண்டியில் எடுத்து பிரெட்டின் ஒரு பக்கத்தில் சமமாக பரப்பவும்.
இதற்கடுத்து தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் தடவி, ரவை தடவிய பக்கம் கீழாக இருக்கும் வகையில் பிரட்டை தவாவில் வைக்கவும்.
இறுதியாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் சுவையான ரவை பிரட் டோஸ்ட் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |