தித்திக்கும் சுவையில் ரவா லட்டு: இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான ரவா லைட்டை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் - 5
- நெய்- தேவையான அளவு
- முந்திரி- 5
- பாதாம்- 5
- பிஸ்தா- 5
- உலர் திராட்சை- 5
- ரவை- 1 கப்
- தேங்காய் துருவல்- ½ கப்
- பால்- ½ கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து ரவை சேர்த்து நன்கு வறுத்து பின் தேங்காய் துருவல் வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கொஞ்சம்கொஞ்சமாக பால் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, அரைத்த சர்க்கரை பொடி, வறுத்த நட்ஸ் சேர்த்து பிணைந்து உருண்டை பிடித்தால் சுவையான ரவா லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |