ஒரு கப் ரவை போதும்.., 15 நிமிடத்தில் பஞ்சு போல பணியாரம் செய்யலாம்
ரவை வைத்து வெறும் 15 நிமிடத்தில் பஞ்சுபோல பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவை- ¼kg
- தயிர்- 100ml
- கேரட்- 2
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலைப் பருப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- சிறிதளவு
- இஞ்சி- சிறிதளவு
- பெருங்காயத் தூள்- ½ ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ரவை எடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதோடு கேரட்டை நன்கு துருவி போட்டு பின்னர் தேவையான அளவு கொத்தமல்லி நறுக்கி சேர்க்கவும்.
அடுத்து இதில் உப்பு சேர்த்து இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
இதற்கடுத்து வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் இதில் பெருங்காயம் சேர்த்து குறைந்த தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி தாளித்த பொருட்களை பணியாரம் மாவில் போட்டு 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
மாவு நன்கு ஊறி கெட்டியாக மாறி வந்ததும் அரிசி மாவு சேர்த்து கலந்துவிடுங்கள்.
இறுதியாக பணியார சட்டியில் எண்ணெய் தடவி மாவு எடுத்து குழியில் ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்தால் பணியாரம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |