1 கப் ரவை இருந்தால் போதும்... சுவையான ஊத்தப்பம் தயாரிக்கலாம்
ஊத்தப்பம் ஒரு சிறந்த காலை உணவு விருப்பமாகும். இது செய்வதற்கு மிகவும் எளிதானது. ஒரு நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால் நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- ரவா - 1 கப் (250 மி.லி கப்)
- அவல் - 1/2 கப்
- தயிர் - 1/2 கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர்
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 1 சிறிய கப்
- பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- கறிவேப்பிலை
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள்
- துருவிய கேரட் - 2
- கொத்தமல்லி இலை நறுக்கியது
- நெய்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் ரவை, ஊறவைத்த அவல், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைக்கவும்.
2. மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
3. தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
4. பின்னர் பொடியாக நறுக்கிய சம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
6. தவாவில் மாவை ஊற்றி, தாளிப்பை மேலே பரப்பவும். நெய்/எண்ணெய் சுற்றி ஊற்றி, சிறிது நேரம் விட்டு திருப்பி போட்டு வேக விடவும்.
7. சூடான ரவை உத்தப்பம் ரெடி தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |