இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் போட்டியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு.. ஓரங்கட்டப்படும் நட்சத்திரம்! கசிந்த தகவல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் மழை காரணமாக டிராவில் முடிந்த நிலையில், லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் 1-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் முனுமுனுப்பை ஏற்படுத்தியது.
எனினும், 2வது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பு திடீரென்று மழை பெய்துவிட்டதால், காலநிலைக்கு ஏற்ப 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தான் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட 25ம் திகதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், 3வது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவனில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.