சாவடிச்சிடுவேன் உன்ன..சக அணி வீரரை பார்த்துக் கூறிய அஸ்வின் (வீடியோ)
கோவை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினின் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
திண்டுக்கல்-கோவை
TNPL 2024 தொடரின் இறுதிப்போட்டி சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிக்கள் இதில் மோதின.
முதலில் துடுப்பாடிய கோவை அணி 129 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம் அர்விந்த் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
2024 TNPL Champion பட்டத்தை அள்ளிட்டு போறாங்க Dindigul Dragons ??#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/YQybLJFzRg
— Star Sports Tamil (@StarSportsTamil) August 4, 2024
அஸ்வின் அதிரடி
பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக 46 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
பாபா இந்திரஜித் 32 (35) ஓட்டங்களும், சரத் குமார் 27 (15) ஓட்டங்களும் விளாச, திண்டுக்கல் அணி 18.2 ஓவரில் வெற்றி பெற்று முதல் முறையாக TNPL கிண்ணத்தைத் தட்டித் தூக்கியது.
போட்டி முடிந்ததும் திண்டுக்கல் வீரர் சரத் குமாரிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஸ்வின் விளையாட்டாக ''சாவடிசிடுவேன் உன்ன..'' என்று சிரித்துகொண்டே கூறிவிட்டு பாராட்டினார்.
இது செம்ம Happy-ஆன ஒரு Twist-உ ??#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/UX49pnBNSu
— Star Sports Tamil (@StarSportsTamil) August 4, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |