ரோஹித், கோஹ்லியைத் தொடர்ந்து ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய மகிழ்ச்சி அடங்குவதற்குள் விராட் கோஹ்லி ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
அவரைத் தொடர்ந்து அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜடேஜா ஓய்வு
இந்த நிலையில் மூன்றாவதாக ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் (35) தற்போது டி20யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
'டி20 உலகக்கிண்ணத்தை வென்று கனவு நனவான நிலையில், ஓய்வு பெறுகிறேன். எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 515 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன் 54 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |