ஜூனியர் உலகக்கோப்பையில் அசத்திய ரவிகுமார் - பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ரவிகுமாரின் அசத்தலான பந்து வீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ரவிகுமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்ற நிலையில் முதல் ஓவரின் 5வது பந்தில் ரவிகுமார் வீசிய இன்ஸ்விங்கில் ஜாக்கப் பெத்தல் எல்.பி. டபிள்யூ ஆகினார்.
ரவிகுமார் தனது முதல் ஓவரிலேயே காலிறுதியில் மூன்றாவது பந்திலும், அரையிறுதியில் முதல் பந்திலும், இறுதிப் போட்டியில் முதல் ஓவரின் 5வது பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படியான ரவிகுமாரின் பந்து வீச்சு இந்திய தேர்வுக்குழுவினரின் கவனத்தை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.