உண்மையை வெளியிடுவேன்.,ரவி மோகனின் மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவு
நடிகர் ரவி மோகன் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் அவரது மனைவி ஆர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இனி நடிக்க மாட்டேன்
தமிழ் நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி விவாகரத்து முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், இதுவரை நடித்த படங்களையும் வெளியிட போவது இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் நடிகர் ரவி மோகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மனைவி ஆர்த்தி கருத்து
இந்நிலையில் நடிகர் ரவி மோகனின் கருத்துக்கு அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.
அதில், என்னுடைய மெளனத்தை பலவீனமாகவோ தவறாகவோ எண்ணிக் கொள்ள வேண்டாம்.
என்னுடைய குழந்தைகள் மற்றும் என்னுடைய கண்ணியத்தை காக்க உண்மையை வெளியிடுவேன் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |