ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிடு! கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை
2022 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுமாறு விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.
3 ஆண்டுக்கும் மேலாக சதமடிக்காத விராட் கோலி, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வு எடுக்குமாறு விராட் கோலிக்கு முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது, கோலிக்கு ஓய்வு அவசியம், ஏனென்றால் அவர் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார் மற்றும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்து விளையாடி, 6-7 ஆண்டுகள் தடம் பதிக்க வேண்டுமென்றால், கோலி அவரது நலனுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டும்.
இதை கோலிக்கு மட்டுமல்ல, எந்தவொரு வீரருக்கும் நான் சொல்வேன்.
உக்ரைனுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கூண்டோடு அழித்த ரஷ்யா!
இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டுமென்றால், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அந்த ஓய்வு நாட்கள் இந்திய அணிக்கு போட்டிகள் இல்லாத காலமாக இருக்க வேண்டும், இந்திய அணி சர்வதேச போட்டிகள் விளையாட நாட்டிகள் ஐபிஎல் தொடரின் போது தான் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.