4 போட்டிகள் கூட தொடர்ந்து ஆட முடியாதவர்கள் எல்லாம் பவுலர்களா? ரவி சாஸ்திரி விளாசல்
இந்திய பந்து வீச்சாளர்கள் சிலர் அடிக்கடி காயங்களோடு போட்டியிருந்து வெளியேறிவதை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
அடிக்கடி காயமடையும் வீரர்கள்
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் காயமடைந்து அணிக்கு ஆடாமல் இருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என ரவி சாஸ்திரி(ravi shastri) கூறியுள்ளார்.
@cricbuzz
மேலும் சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் மும்பைக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில், தீபக் சஹார் ஒரு ஓவர் வீசிவிட்டு காயமடைந்து பெவிலியின் திரும்பியதை ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
”இந்திய பவுலர்கள் தேசிய கிரிக்கெட் அகாடாமியிலேயே குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி காயமேற்படுவதால் அங்கு சென்று ஓய்வெடுக்கிறார்கள்.”
@getty images
”சில தினங்களுக்கு பின்பு விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின் மீண்டும் காயங்களோடு அங்கு செல்கிறார்கள்” என ரவி சாஸ்திரி காட்டத்தோடு கூறியுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் மீது விமர்சனம்
”பெரிய காயமென்றால் பரவாயில்லை, ஆனால் 4 போட்டிகளில் ஆடிவிட்டு தொடை பிடித்துக் கொள்வது, தோள்பட்டையை பிடித்துக் கொள்வது, முழங்காலை பிடித்து கொள்வதையெல்லாம் நம்ப முடியவில்லை.”
@toi photo
"இவர்கள் என்ன பயிற்சி எடுக்கிறார்கள், அப்படி என்ன தான் நடக்கிறது? சிலரெல்லாம் ஐபிஎல் போட்டிகளில் 4 ஓவர்கள் வீசுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. 3 மணி நேர ஆட்டத்திலே காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?” என ரவி சாஸ்திரி கோபமாக பேசியுள்ளார்.
”சஹார், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் சென், மோசின் கான், யாஷ் தயால் இந்த வரிசையில் இன்னும் நிறைய வீரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். இந்த ஐபிஎல் முடிவதற்குள் இன்னும் எத்தனை பவுலர்கள் காயமடைவார்களோ தெரியவில்லை.
@ap
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக உடல் ஃபிட் ஆகாமலே தகுதி சான்றிதழ் பெறுகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி ஐபிஎல் தொடரில் ஆடி முடித்தாலும் இந்திய அணிக்கு ஆடும்போது காயமடைந்து விடுகின்றனர்” என ரவி சாஸ்திரி தொடர்ந்து பந்து விச்சாளார்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.