இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினர் 3 பேருக்கு கொரோனா!
இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை வந்த கொரோனா பரிசோதனை முடிவில் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோரை பிசிசிஐ மருத்துவக் குழு தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் நான்கு பேரும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள் ஹோட்டலிலே தங்கியிருக்க வேண்டும் எனவும், மருத்துவக் குழு உறுதிசெய்யப்படும் வரை அவர்கள் இந்திய அணியுடன் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் மற்றும் பரிசோதனையில் தொடர்ந்து இரண்டு முறை தொற்று பாதிப்பு இல்லை என உறுதியான பிறகே அவர்கள் தனிமைப்படுத்தலிருந்து வெளியே வர முடியும் என பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக செப்டம்பர் 10 முதல் 14 வரை நடைபெறவுள்ள மான்செஸ்டர் டெஸ்டை அவர்கள் மூவரும் தவிறவிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.