உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி..இந்திய அணி தேர்வு..ரவி சாஸ்திரி பாராட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இப்போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்தியா அணியின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து, நியூசிலாந்து அணியை எதிர் கொண்டு இலங்கை அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும் தகுதி இலங்கைக்கு இருக்கும். ஆனால், இலங்கை அணியின் கனவை நியூசிலாந்து அணி தகர்த்தெறிந்தது.
இலங்கையை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், புள்ளி அடிப்படையில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டிக்குள் நுழைய தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி தேர்வு - ரவி சாஸ்திரி பாராட்டு
வரும் ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக் குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Best Indian team selected. Well done selectors and team management ?? #WTCFinal2023 #TeamIndia pic.twitter.com/olIK46GO96
— Ravi Shastri (@RaviShastriOfc) April 25, 2023