கோலி, ரோஹித்திற்கு பதிலாக T20ல் இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.... - ரவி சாஸ்திரி யோசனை
கோலி, ரோஹித்திற்கு பதிலாக இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்- ரவி சாஸ்திரி
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இத்தொடரில் அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இத்தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிச் செல்லும். தற்போது, இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி நுழைந்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கோலி, ரோஹித்திற்கு பதிலாக இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஜெயஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை அடுத்து நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இவர்களை சேர்க்க வேண்டும். இவர்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதனால், இப்போதிலிருந்தே இந்திய வீரர்களை தயார்படுத்த வேண்டும். கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 தொடர்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விட்டார்கள்.
இவர்களுக்கு பதிலாக இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதன் மூலம், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஃபார்மட்டில் அதிகம் கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.