தோனி அப்படின்னா...விராட் கோலி இப்படி : ரகசியத்தை உடைக்கும் ரவி சாஸ்திரி
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன்னாள், இந்நாள் கேப்டன் குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது 7 ஆண்டு கால அனுபவத்தை பேட்டியாக கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்த்ரி அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி விராட் கோலியும், தோனியும் களத்தில் அப்படியே நேருக்கு நேர் எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். களத்துக்கு வந்தால் கோலி ஒரு ஆக்கோரஷமானவர். எதிரணியை வீழ்த்த வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார். ஆனால் தோனி அமைதியின் உச்சம். எப்போதும் கூலாக இருப்பார்.
சதம் அடித்தாலும் சரி, டக் அவுட்டானலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அவ்வளவு ஏன் உலகக் கோப்பையை வென்றாலும் சரி தோனி அலட்டி கொள்ளவே மாட்டார்.தோனியின் போன் நம்பர் என்னிடம் கிடையாது. தோனியின் போன் நம்பரை நான் இதுவரை அவரிடம் கேட்டது இல்லை.
அவரிடம் போனில் பேசியதும் இல்லை. தோனிக்கு கையில் செல்போனை எடுத்து செல்வது பிடிக்காது. தோனியிடம் இருக்கும் பல தகுதிகள் ரோகித் சர்மாவிடம் உள்ளது. ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக திகழ்வார்.
அதேபோல கோலி டெஸ்டில் இன்னும் 2 ஆண்டுகள் கேப்டனாக இருப்பார் என நினைத்தேன். எனினும், இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை நான் மதிக்கிறேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.