இந்தியா மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்! ரவிசாஸ்திரி நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, இந்திய அணி மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்ததால், கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்திய அணியில் ஏற்பட்டுள்ள பிளவு தான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இது குறித்து கூறுகையில், இந்திய அணி நீண்ட காலமாகவே கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியர்களின் முன்னாள் நட்சத்திரமாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். ஆனால் அவர் 6 உலக கோப்பைகளில் விளையாடி ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார்.
சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண் ஆகிய வீரர்கள் உலக கோப்பையை வென்றதில்லை. அதற்காக அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தம் இல்லை. நம்மிடம் உலக கோப்பை வென்ற கேப்டன்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
அதற்காக இந்திய வீரர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லை என கூற முடியாது. இந்திய அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.