ரவிசாஸ்திரி அடுத்து எந்த அணிக்கு பயிற்சியாளர் ஆக போகிறார் தெரியுமா? கசிந்த முக்கிய தகவல்
இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர ரவிசாஸ்திரி அடுத்து எந்த அணிக்கு பயிற்சியாளர் ஆகப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ரவிசாஸ்தி உட்பட பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் அனைவரின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது.
இதனால் இந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கு பின் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல்டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரவிசாஸ்திரி இதன் பின்ன என்ன செய்ய போகிறார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் புதிய அணியாக களமிறங்கவுள்ள அகமதாபாத் அணிக்கு பயிற்சியாளராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அணியின் உரிமையாளர்கள் சாஸ்திரியை பயிற்சியாளர் ஆக்குவதில் ஆர்வமாக இருப்பதாகவும், இதன் காரணமாக அந்தணியின் உரிமையாளர்கள் ரவிசாஸ்திரியை துபாயில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ரவிசாஸ்திரி டி20 உலகக்கோப்பை முடிந்த பின்பு எந்த ஒரு விஷயமும் பேசிக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.