2019 உலகக்கோப்பையில் இந்திய அணி தேர்வில் நடந்த தவறு! முதன் முறையாக சொன்ன ரவிசாஸ்திரி
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, 2019 உலகக்கோப்பை போட்டி தொடர் குறித்து முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும், ஒரு கோப்பைகளை கூட வென்றதில்லை என்பதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. இதையடுத்து, அவர் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு, கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைந்ததால், அவரும் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இது குறித்து முதல் முறையாக அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி, தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ததில், எனக்கு உடன்பாடு இல்லை.
அணியை தேர்வு செய்யும்போது என்னிடம் யாரும் ஆலோசனையும் கேட்கவில்லை, ஒரே அணியில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று இன்னும் புரியவில்லை.
அதில் எனக்கு சற்றும் உடன்பாடு கிடையாது. ஏனெனில் அந்த அணியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், டோனி என மூவரையும் ஒரே அணியில் வைத்திருப்பது என்ன லாஜிக் என்பது தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை அனைத்து தேர்வின்போது என்னிடம் கருத்துக் கேட்டாலோ அல்லது பொது விவாதம் நடந்தாலோ மட்டுமே நான் எனது கருத்தை தெரிவிப்பேன். மற்றபடி தேர்வு குழுவினரின் வேலைகளில் நான் தலையிடுவது கிடையாது.
அதன்படி தனியாக நடைபெற்ற அந்த அணி தேர்வில் நான் எதையும் சொல்லவில்லை.
அவர்களாகவே அணி வீரர்களை தேர்வு செய்துவிட்டார்கள். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.