ரோகித் சர்மாவை மாற்றி காட்டுவேன்...சொன்ன சபதத்தை நிறைவேற்று காட்டிய ரவிசாஸ்திரி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி தான் சொன்ன சபதத்தை நிறைவேற்றி காட்டியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தவிர, இந்திய அணியின் செயல்பாடு டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா சமீப டெஸ்ட் தொடர்களில் சிறப்பான துவக்கத்தை கொடுத்து வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பு அங்கு சாரல் மழை பெய்திருந்தது. இதனால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என்றும் பேட்டிங்கிற்கு கடினமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதனை பொய்யாக்கி சிறப்பாக விளையாடினார் ரோகித்சர்மா. வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க பதற்றமாக இருந்த வீரர்களுக்கு அவரின் பேட்டின் மன உறுதியை கொடுத்தது.
இதனால் முதல் இன்னிங்ஸில் அவர அரைசதம் கடந்த 83 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம், ரோகித்சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு அச்சுறுத்தும் வீரராக மாறியுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் ரவிசாஸ்திரி என்று தான் கூறப்படுகிறது. ரோகித் சர்மா குறித்து மிஷன் டாமினேஷன் புத்தகத்தில், கடந்த 2019ம் ஆண்டு ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதன் முதலில் ஓப்பனிங் களமிறங்கிய போது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான் ரோகித்தை தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றி காட்டுகிறேன்.
இல்லையென்றால் எனது கிரிக்கெட் வாழ்வின் தோல்வி என ஒப்புக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்போது அவர் கூறியது போன்றே ரோகித்சர்மா ஒரு அற்புதமான வீரராக மாறியுள்ளார். சபதத்தையும் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.