கோஹ்லியின் ஓய்வு அறிவிப்பிற்கு முன் அவரிடம் இரு கேள்விகளை கேட்டேன்: ரவி சாஸ்திரி
டெஸ்டில் ஓய்வுபெறுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், விராட் கோஹ்லி தன்னிடம் பகிர்ந்துகொண்ட விடயங்களை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லி ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியளித்தது.
அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் (Ravi Shastri) பேசியுள்ளார்.
அந்த உரையாடலில் பேசிய விடயங்களை தற்போது ரவி சாஸ்திரி பகிர்ந்துகொண்டுள்ளார்.
எந்த வருத்தமும் இல்லை
அவர் கூறுகையில், "நான் அவரிடம் இதுகுறித்துப் பேசினேன். ஓய்வு அறிவிப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். அவர் தனது அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பது அவரது மனதில் தெளிவாக இருந்தது. எந்த வருத்தமும் இல்லை.
நான் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் கேட்டேன், அது ஒரு தனிப்பட்ட உரையாடல் என்று உங்களுக்குத் தெரியும். அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். அவரது மனதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது என்னை ஆம், நேரம் சரியானது என்று நினைக்க வைத்தது. மனம் அவரது உடலுக்கு கூறிவிட்டது, அதுபோக வேண்டிய நேரம் என்று" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |