பும்ரா கேப்டனாவதை நான் விரும்பவில்லை: வெளிப்படையாக கூறிய முன்னாள் பயிற்சியாளர்
ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாவதால் நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை இழப்பீர்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அணித்தலைவர்
ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் அணித்தலைவர் யார் என்ற கேள்வி நிலவியது.
சுப்மன் கில் (Shubman Gill) அணித்தலைவராகவும், ரிஷாப் பண்ட் (Rishabh Pant) துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அணித்தலைவராக அறிவிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதுதொடர்பாக தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியாவிற்குப் பிறகு ஜஸ்பிரித்தான் வெளிப்படையான தேர்வாக இருந்திருப்பார். ஆனால் அவரை கேப்டனாக பார்க்க விரும்பவில்லை. மேலும் நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை இழப்பீர்கள்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |