அந்த தமிழக வீரரைப் பற்றி... தினேஷ் கார்த்திக்கிடம் பேசப்போகிறேன்: ரவிசாஸ்திரி ஓபன் டாக்
இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் குறித்து தமிழக அணியின் கேப்டன் ஆன தினேஷ் கார்த்திக்கிடம் பேசுவேன் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது இருக்கும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை அப்படியே கெட்டியாக பிடித்து கொள்கின்றனர் என்று சொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு இளம் வீரர் தான் வாஷிங்டன் சுந்தர், தமிழக வீரரான இவர் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போதும், தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தற்போது வரை இவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இவர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கூறுகையில்,வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அவுஸ்திரேலியா தொடரை விட இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார்.
அவரது பேட்டிங் மேலும் முன்னேற்றம் அடைந்தால், டாப் ஆர்டரில் கூட ஆட வைக்க முயற்சி செய்வோம். தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் சுந்தர் இனிமேல் நம்பர் 4-ல் தான் விளையாட வேண்டும்.
அப்போதுதான் அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும். இது குறித்து நான் தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடம் பேசப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
